Friday, October 23, 2020

கணினி வரலாறு.


இன்றைய காலகட்டத்தில் மனிதன் ஒரு மணி நேரம் செய்யகூடிய வேலைகளை ஒரு மணி துளி நேரத்தில் செய்து நமது நேரத்தை மிச்சம் செய்து கொடுப்பதில் இந்த கணினிக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கணினி உருவான வரலாற்றை பற்றி விரிவாக கீழே காண்போம்.

ஆரம்பத்தில் மனிதன் கூட்டல் ,கழித்தல் வேலைகளை செய்வதற்காக தனது விரல்களை பயன்படுத்தினான். கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் எண்சட்டதை ( ABACUS) கண்டுபிடித்தான் . இதுவே முதலாவது கணினியாகும். இவ்வாறான எண்சட்டங்கள் பல்லாயிரக்கணக்கான நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1617ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த JOHN NAPIER என்பவரால் மடக்கை கோட்பாடு (LOGARITHMS) உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மடக்கை பெறுமானங்கள் கொண்ட சட்டகங்கள் அமைக்கப்பட்டு அதனோடு கணித்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. இச்சட்டகங்கள் நேப்பியரின் சட்டகங்கள்(NAPIER'S BONES) என அழைக்கப்பட்டன.

1642ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் கணிதவியலாளரான பிளைஸ் பாஸ்கால்( BLAISE PASCAL) என்பவரால் கூட்டற்பொறி கண்டுபிடிக்கப்பட்டது .இவ்வுபகரணம் பாஷ்காலின் என அழை
க்கப்பட்டது.

1674ஆம் ஆண்டில் இவ்வுபகரணம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த கணிதவியலாளரான கோட்பிரட் வில்லியம் என்பவரால் மேம்படுத்தப்பட்டது.கூட்டல் ,கழித்தல் இத்துடன் பெருக்களும் சேர்க்கப்பட்டது.

1822-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கணிதவியாலாளரான சார்லஸ் பாப்பேஜ் என்பவரால் பொறிமுறை கணித்தலுக்கு உருமாதிரி அமைக்கப்பட்டது. இதை வித்தியாச பொறி (Different Engine) என அழைக்கப்பட்டது.

1833-ம் ஆண்டு பகுப்பு பொறி(Analytical Engine)உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள கணினி கட்டமைப்புக்கு இதுவே அடித்தளமாக இருந்தது.காலத்திற்கு ஏற்ப அதன் வளர்ச்சியும் மாறிக்கொண்டே இருந்தன. தற்கால கட்டத்தில் கணினி அபார வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு இருக்கிறது.

கணினி வந்த பிறகு மனிதனுடைய பல பணி சுமைகளை சில மணி துளிகளில் தீர்த்து வைத்தது. தற்போது அனைத்து துறைகளிலும் கணினி இல்லாமல் நாம் காண முடியாது அப்படி ஒரு வளர்ச்சி அடைந்துள்ளது இந்த கணினி.

வரும் காலங்களில் கணினியின் வளர்ச்சியை நாம் யூகிக்க கூட முடியவில்லை அப்படி ஒரு வளர்ச்சியை அடையும் என்பதே நாம் அனைவரின் எதிர்பார்ப்பு.

1 comment: