ஆண்ட்ராய்டு என்றால் என்ன? தற்போது இந்த கேள்வியை யாரிடமாவது நாம் போய் கேட்டால் நம்மை அடிக்க வந்துவிடுவார்கள், ஆம் அப்படி ஒரு நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறது சிறுவர்கள் முதல் முதியவர்களின் கைகளில் இந்த ஆண்ட்ராய்டு. சரி அப்படி என்ன தான் இந்த ஆண்ட்ராய்டு-னு கொஞ்சம் பாப்போம் .
ஆண்ட்ராய்டு என்பது ஒரு இயங்கு தளம் கணினியில் நாம் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளத்தை போன்றது இந்த ஆண்ட்ராய்டு , லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய செல்லிடப்பேசிக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இயங்குதளம். முதலில் இது ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு இந்த நிறுவனத்தை கூகுள் நிறுவனம் இதை வாங்கியது . 5 நவம்பர் 2007 அன்று ஆண்ட்ராய்டு வெளியிடப்பட்டது , 21 அக்டோபர் 2008 முதல் ஒரு திறந்த மூலமாக ஆண்ட்ராய்டு கிடைக்கக்கூடியதாக இருந்தது .
30 ஏப்ரல் 2009 அன்று அண்ட்ராய்டுக்கான அதிகாரப்பூர்வ 1.5 (கப்கேக்) புதுப்பித்தல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 15 செப்டம்பர் 2009 அன்று 1.6 (டோனட்) SDK வெளியிடப்பட்டது. அதையும் மேம்படுத்தப்பட்டு 26 அக்டோபர் 2009 அன்று 2.0 (எக்லேர்) SDK வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் வன்பொருள் வேகம் மேம்படுத்தப்பட்டது . அதன் பிறகு 2011 -ல் பிரோயோ அடுத்து அதே 2011-ல் ஜிஞ்சர் பிரட் என்ற பதிப்பையும் வெளியிட்டது.
அதன் பிறகு அடுத்தடுத்து வரிசையாக ஹனி கோம்ப் , ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச்,ஜெல்லி பீன்,கிட் காட் ,லாலிபாப்,மார்ஸ்மால்லோ,ஆண்ட்ராய்டு நுகட் ,ஆண்ட்ராய்டு ஓரியோ, ஆண்ட்ராய்டு பை கடைசியாக 2019 -ல் ஆண்ட்ராய்டு 10 பதிப்பை வெளியிட்டு இருந்தது இதற்க்கு ஆண்ட்ராய்டு -Q என்று பெயரிடப்பட்டது .
ஆண்ட்ராய்டு அதீத வளர்ச்சியை பார்க்கும் போது வரும் காலங்களில் மாபெரும் மாற்றம் அடையும் என்ற நம்பிக்கையை நம் ஆள் மனதில் புகுத்துகிறது. இந்த வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் இதில் சில வழிகேட்டிற்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது , ஆகவே நாம் வழிகேட்டிற்கு செல்ல கூடியதை தவிர்த்து விட்டு வளர்ச்சி பாதையை நோக்கி செல்வோம் .
No comments:
Post a Comment