நம் அன்றாட வாழ்வில் whatsapp பயன்படுத்தாத பயனர்களை நாம் காண்பது அரிது, அந்த அளவிற்கு whatsapp-ன் பயன்பாடு பட்டி தொட்டி எங்கும் இருக்கின்ற பயனர்களை சென்று அடைந்து விட்டது . குறுந்செய்தி , புகைப்படம் ,காணொளி ,ஒலி போன்றவற்றை மற்றவருடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம் .
அது மட்டும் அல்லாமல் முந்தய கால கட்டத்தில் ஒருவரிடம் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள கடிதம் மற்றும் தொலைபேசியை தான் நாடி இருந்தோம், அதன் பிறகு செல்லிடப்பேசியை நாடி இருந்தார்கள் இருந்தும் புகைப்படம் மற்றும் பிறவற்றை நாம் பகிர்ந்து கொள்வதில் கொஞ்சம் சிரமங்கள் இருந்தன நாளைடைவில் அந்த சிரமங்களை போக்கும் விதமாக whatsapp என்ற செயலி நம் அனைவருக்கும் ஒரு வர பிரசாதமாக அமைந்தது .
இதன் மூலம் ஒரு செய்தியையோ அல்லது காணொளியையோ எளிதில் மிக விரைவில் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள முடிகிறது, இது பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமே!.
இப்பேற்பட்ட whatsapp -ல் சில வசதிகளை அந்த நிறுவனம் பயனாளிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.அவற்றை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகின்றோம்.
ஒருவருக்கு ஒரு குறுந்செய்தியை அனும்பும்போது சில செய்திகள் முக்கியமானதாக இருக்கும் அவற்றை பிரித்து காட்டுவதற்காக இந்த வசதியை அறிமுகபடித்தியுள்ளது .
BOLD - செய்திகளை தடிமனாக காட்ட பயன்படுகிறது .இதை whatsapp -இல் பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு மற்றும் பின்பு * இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .
EX : * welcome to computer uzhagam *
result -- welcome to computer uzhagam
ITALIC - இது எழுத்துக்களை சற்று சாய்வானதாக காட்ட பயன்படுகிறது. இதை பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு மற்றும் பின்பு - இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .
EX : -welcome to computer uzhagam-
result -- welcome to computer uzhagam
STRIKE THROUGH- - இது எழுத்துக்களை சற்று மாறுபட்டு இடைகோடிட்டு காட்ட பயன்படுகிறது. இதை பெற நாம் எழுதும் செய்திகளுக்கு முன்பு மற்றும் பின்பு ~ இந்த அடையாளத்தை பயன்படுத்தவும் .
EX : ~welcome to computer uzhagam~
result -- welcome to computer uzhagam
*நன்றி நண்பர்களே மீண்டும் இது போன்ற தகவல்களை அடுத்த பதிவுகளில் காண்போம். *
குறிப்பு : உங்களது கனிவான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.